சென்னை:தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவில் உள்ளார். இவர் 2001-2006 காலகட்டத்தில் அதிமுக தலைமை அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிமாக முடக்கியுள்ளது. அந்த வகையில் 100 ஏக்கர் நிலம், வீடுகள், சொகுசு கார்கள் முடக்கப்பட்டாத தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தலை சுற்றும் கேட்டால்... பங்குகளாக சொத்துகள் குவித்த முன்னாள் அமைச்சர்