சென்னைரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழாவில் இன்று (ஆக.27) நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே, வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு, "தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தப் போட்டிகளுக்கு இந்திய தேர்தல் அதிகாரியே தமிழகத்திற்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவார் என நினைக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகு, பல்வேறு நாடுகளில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தபோதும், இந்தியாவில் அது போன்று எந்த பிரச்சனையும் வரவில்லை. அதனால்தான், தற்போது மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா உள்ளது.
கடந்த 1953-ல் 18 % வாக்குகள் தான் பதிவாகிய நிலையில், தற்போது 73 % வாக்குகள் பதிவாகிறது. 100 % வாக்குகள் பதிவு ஆகும்போது நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் இணைய வழி மூலம் இப்போட்டிகளை நாங்கள் போட்டி நடத்தினோம். நினைத்ததை விட மக்கள் ஆர்வமாக போட்டியில் பங்கேற்றனர். 18 பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில் சில போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே, "உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெண்கள் இவருடைய பெண், மனைவி என குறிப்பிட்ட காலங்கள் போய் தற்போது மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 50% பெண்கள் உள்ளனர்.