தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

By

Published : May 17, 2021, 9:16 PM IST

5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட நிறுவங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை

சென்னை: ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணத்திற்காக இ-பதிவு விண்ணப்பிக்க தற்காலிகத் தடை!

அதிக அளவிலான மக்கள் திருமணத்திக்காக இ-பதிவு செய்வதால், தற்காலிகமாக அந்தப் பிரிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதரபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கரோனாவிலிருந்து மீண்ட ரங்கசாமி; அப்பா பைத்தியசாமி கோயிலில் சாமி தரிசனம்!

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பெண் ஊழியருடன் மண உறவைத் தாண்டிய காதலில் இருந்த பில்கேட்ஸ்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

பெண் ஊழியர் ஒருவருடன் பில்கேட்ஸ் மண உறவைத்தாண்டிய காதலில் இருந்தது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்தியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

'டப்பிங் கொடுக்காதது ஏன்?' - கர்ணனின் ஏமராஜா விளக்கம்

'கர்ணன்' திரைப்படத்தில் தான் சொந்தக் குரலில் பேசாதது குறித்து ஏமராஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லால் விளக்கமளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 'மீனா'வுக்கு கெட்டி மேளம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த கவிதா கவுடா, பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவுக்கு போனிகபூர் இரங்கல்

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவுக்குத் தயாரிப்பாளர் போனிகபூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கரோனா பரவலைத் தடுக்க பொறுப்பா இருங்க...மாஸ்க்கை சரியா போடுங்க' - வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றி மாறன் நித்திஷ் வீராவுக்கு இரங்கல் தெரவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details