தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM - யூரோ 2020 ரவுண்ட் அப்

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM
9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM

By

Published : Jun 21, 2021, 9:00 AM IST

யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர்

சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 'நோய்நாடி நோய்முதல் நாடி' எனும் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசினார்.

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க தற்போது உள்ள ஊரடங்கை மேலும் சில தளர்வுகளோடு ஜூன் 28ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை தொடக்கம்

புதிய தளர்வுகளின்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை இன்று தொடங்கியது.

தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை

சென்னை: பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று(ஜுன்.21) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

'நீட் வேண்டாம்' - ராஜன் குழுவிற்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்

நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்யும் ராஜன் குழுவிற்கு அனிதாவின் தந்தை சண்முகம் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வீடு தேடிவந்த தமிழிசை: பரிசு கொடுத்த ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

இன்றுமுதல் தொடங்குகிறது சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் இன்றுமுதல் (ஜூன் 21) தொடங்குகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

யூரோ 2020 ரவுண்ட் அப்: ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலி

2020 யூரோ கால்பந்து ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details