தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM - சேலை கட்டிய சாகச பெண்

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 19, 2021, 9:03 AM IST

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 19) ஆலோசனை நடத்துகிறார்.

கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் வகுப்புகள் தொடக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

'தடுப்பூசி பாரபட்சத்தின் மூலம் திமுக அரசை அடிமையாக்க நினைக்கும் பாஜக' - முத்தரசன்

தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி வழங்குவதில் காட்டுகின்ற பாரபட்சத்தின் மூலமாக திமுக அரசை தன்னுடைய அடிமையாக வைத்திருக்க இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிர்ப்பந்திக்கின்றது என்று சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘தமிழ் வளர்ச்சித் துறை’ அமைச்சகம் எங்கே - சீமான் கண்டனம்!

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென இருக்கும் ‘தமிழ் வளர்ச்சித் துறை’ என்னும் தனி அமைச்சகத்தைச் சிதைத்து, அதன் முதன்மைத்துவத்தைக் குறைத்து வலுவிழக்கச் செய்வதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலி வணிக உரிமம் பெற்ற நிறுவனங்களை ஆதரிக்காதீங்க! - அமைச்சர் மூர்த்தி

போலி வணிக உரிமம் பெற்ற நிறுவனங்களை வணிகர்கள் ஆதரிக்க வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஹேக்கர்களிடமிருந்து விலகியே இருங்கள் - சைபர் கிரைம் தரும் அறிவுரைகள்!

ஹேக்கர்களிடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோவில் ஒருவர் கைது

ஆவடி அருகே +2 படித்து வரும் மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துரையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

யூ-ட்யூபில் கலக்கும் சேலை கட்டிய சாகச பெண் மோனலிசா

புவனேஸ்வர்: புல்லட் வண்டி, டிரக், டிராக்டர், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டுகிறார் இந்தப் பெண். அத்துடன் குதிரை சவாரியிலும் இவர் கைத்தேர்ந்தவர். இவரின் இந்தச் சாகச செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஹால் கிராமத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மோனலிசா பாத்ரா.

லூசிஃபருக்கு பிறகு லாலேட்டனுடன் மீண்டும் கைகோர்க்கும் ’இயக்குநர்’ பிருத்விராஜ்!

கொச்சி: நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து மீண்டும் படம் இயக்கவுள்ளார்.

மறைந்தார் மின்னல் மனிதர் மில்கா சிங்!

'பறக்கும் சீக்கியர்' என்ற புகழுக்குச் சொந்தக்காரரும், தடகளத்தில் இந்தியாவினை உலகறிய செய்தவருமான மில்கா சிங் நேற்று (ஜூன் 18) இரவு 11:30 மணியளவில் காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details