தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 PM - நடராஜன்

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

E TV Bharat TOP 10 NEWS @ 9 PM on may 27
E TV Bharat TOP 10 NEWS @ 9 PM on may 27

By

Published : May 27, 2021, 9:20 PM IST

'அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறது!'- உயர் நீதிமன்றம் பாராட்டு

கரோனாவை தடுக்கும் பணியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

'போக்குவரத்து தாெழிலாளர்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்க வேண்டும்' - ஓபிஎஸ்

மக்களை இணைப்பதில், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது, போக்குவரத்து. தங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களையும்; முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

'லட்சத்தீவில் மக்கள் விரோதம்' - கமல் கடும் கண்டனம்

லட்சத்தீவில் பிரபுல் பட்டேலால் இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது. புதிய சட்டங்கள் லட்சத்தீவின் அழகையும், மக்களின் உரிமைகளையும் அழிப்பதாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மின்வாரிய பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம்: மின்சார வாரியப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் பணியினை சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன் தொடங்கி வைத்தார்.

50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனத்தின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் இன்று வழங்கப்பட்டது.

காவல் துறை நடவடிக்கை அச்சமூட்டுவதாக உள்ளது: ட்விட்டர் நிறுவனம் புகார்

ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி காவல் துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என ட்விட்டர் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

Market Update - சந்தை நிலவரம்: புதிய உச்சத்தில் நிஃப்டி பங்குகள்!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி(Nifty) புதிய உச்சத்தில் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

முதல் டோஸ் கோவிஷீல்டு, 2ஆம் டோஸ் கோவேக்ஸின்; உ.பி-இல் நேர்ந்த குளறுபடி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் மாறி செலுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவின் விக்கெட்டை எடுக்க நடராஜன் போட்ட தடுப்பூசி

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இன்று (மே 24) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

’இப்படிப்பட்ட நபர்களின் கலை இல்லாமல் என்னால் வாழ முடியும்’ - வைரமுத்துவுக்கு பார்வதி கண்டனம்

”ஓஎன்வி சார் எங்கள் மாநிலத்தின் பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவர் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது. பாலியல் குற்றங்கள் முன்வைக்கப்பட்ட ஒருவருக்கு அவரது பெயரால் இத்தகைய மரியாதையை வழங்குவது அவருக்கு செய்யும் அவமதிப்பு" - நடிகை பார்வதி திருவோத்து.

ABOUT THE AUTHOR

...view details