தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 PM - கொளத்தூர் தொகுதி

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 PM
9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 PM

By

Published : May 26, 2021, 9:14 PM IST

ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாட்ஸ்அப் வழக்கு: பயனர்களின் உரிமையைப் பறிக்கின்றனவா புதிய விதிமுறைகள்?

புதிய விதிமுறைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முதலமைச்சர்

சென்னை: கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.

'அரசு அலுவலர்களை பந்தாடும் போக்கினை கைவிடவும்' - சீமான்

பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

'கஷ்டத்திலும் காளைகளை காக்கும் காளையன்' - ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கான உத்வேகம்

ஜல்லிக்கட்டு காளைகளையும் நாட்டு மாட்டினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை இழந்த பின்னரும் கூட போராடி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் வீரபாண்டி.

’மதுரை வழியாக செல்லும் மேலும் சில ரயில்கள் ரத்து’ - தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம்

மதுரை : பயணிகள் வரத்து குறைவு காரணமாக மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் தெரிவித்துள்ளது.

’லட்சத்தீவு மக்களின் பின் நான் நிற்கிறேன்’ - ராகுல் காந்தி ட்வீட்

அடக்குமுறையை சந்திக்கும் லட்சத்தீவு மக்களுக்கு நான் துணை நிற்கிறேன் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

’ஹெல்மெட் அணிந்து கொள்ளையடித்த இளைஞர்கள்’ - வெளியான சிசிடிவி காட்சி

ஜார்கண்ட்: ராஞ்சியில் ஹெல்மெட் அணிந்த இரண்டு இளைஞர்கள் பட்டப்பகலில் கொரியர் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்திற்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்து தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாகப் பிறந்திட நான் புத்தனில்லை வழிவிடு - #15YearsOfPudhupettai

வலியது பிழைத்து வாழும் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் இப்படத்தின் மையக்கரு என செல்வா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரு அறிவியல் கோட்பாட்டை மையமாக வைத்துதான் செல்வராகவன் இந்தக் கதையை எழுதினாரா? என்று அவரிடம் கேட்டால்தான் தெரியும்.

'பேட் மேன்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்!

மும்பை: பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய த்ரில்லர் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details