தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 9 PM - இயக்குநர் ஷங்கர்

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்..

9 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 9 PM
9 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 9 PM

By

Published : Jul 14, 2021, 9:07 PM IST

அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூலை 16இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக மக்களைவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 16 (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் மோசடி வழக்கு: முறையாக விசாரிக்காத பெண் ஆய்வாளர் இடமாற்றம்

நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதியப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

'மாணவர்களை ஏமாற்றுவதை இப்போதாவது திமுக நிறுத்துமா?'

இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமுமுக vs மமக: பேனரால் வெடித்த போர்... அலுவலகம் சூறை..!

மண்ணடியில் உள்ள தமுமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. மமக, தமுமுக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

’ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு துணை நிற்கும்’

சென்னை: ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு துணை நிற்கும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கார் பேனட்டில் அமர்ந்து போட்டோ ஷூட்... போலீஸில் சிக்கிய கேங்...

லைக்குகளுக்கு ஆசைப்பட்டு லைஃபையே போட்டோ ஷீட்டுக்காக அடமானம் வைக்கிறார்கள், புதுமணத் தம்பதிகள். ப்ரீ வெட்டிங் ஷூட் எனும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு எல்லை இல்லாமல் போனது. மகாராஷ்டிராவில் மணப்பெண் துணிகர செயலில் ஈடுபட்டதால், அவர் உட்பட பலரும் காவல் துறையிடம் அகப்பட்டுள்ளனர்.

லிங்குசாமி படப்பிடிப்பை பார்வையிட்ட இயக்குநர் ஷங்கர்!

ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஐசிசி தரவரிசை வெளியீடு- 2ஆம் இடத்தில் விராத் கோலி!

ஐசிசி தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. பேட்டிங்கில் விராத் கோலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவரை போல், ஒருநாள் தரவரிசையில் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details