தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

By

Published : Jun 6, 2021, 9:18 AM IST

10 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டலச் சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வு ரத்து: குழு அமைப்பு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் - ஓபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் எந்த மாற்றமில்லை எனவும் அது குறித்த காரணங்களை அரசு விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

'வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ' - ஆ. ராசா உருக்கம்

"2ஜி அலைக்கற்றை வழக்கில் நான் சிக்குண்டபோது, ‘பனிக்குடத்தில் வைத்து என்னைக் காப்பாற்றிய தாய் கருணாநிதி’ என்று நான் அப்போது பதிவுசெய்திருந்தேன் என்பதை அறிவீர்கள். அந்தத் தாய் இன்று இல்லாமல் போனாலும் அதே தாய்மையை தங்களிடம் கண்டுணர்ந்து வியந்து உங்களை வணங்குகிறேன்" என்று திமுக எம்பி ராசா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் கொண்டுவரும் 3 புதிய அம்சங்கள் என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியில் டிஸ்அப்பியரிங் மோட் (Disappearing mode), வீவ் ஒன்ஸ் (View once), மிகவும் எதிர்பார்க்கப்படும் பல தகவல் சாதனங்களின் ஆதரவு (Multi device) ஆகிய மூன்று அம்சங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

கட்சியில் மருமகனை முன்னிறுத்தும் மம்தா: தேசியளவில் புதிய பதவி

தனது மருமகனும் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியை கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக மம்தா பானர்ஜி பரிந்துரைத்த நிலையில், அவரை நியமனம்செய்து திருணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காளிதாஸ் ஜெயராமை இயக்கும் கிருத்திகா உதயநிதி

சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புது படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details