தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS @ 9AM
9 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS @ 9AM

By

Published : Jun 3, 2021, 9:15 AM IST

Updated : Jun 3, 2021, 9:21 AM IST

மேடை நாடகம் தொடங்கி திரையுலகம் வரை: கருணாநிதியின் கலைப்பயணம்

கலைஞர், முத்தமிழ் அறிஞர் என்று அவரை நேசிக்கும் மக்களால் புகழப்படும் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் இன்று. அவரது கலைப் பயணம் குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பு.

'கருணாநிதி பிறந்தநாள் - மாநில உரிமை நாள்'

கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள்: முதலமைச்சரின் 7 திட்டங்கள்.. லிஸ்ட் இதோ..

சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு - உங்கள் கருத்து?

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் இன்று (ஜூன் 3) இணையதளம் மூலம் கருத்துத் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது தென்மேற்குப் பருவமழை: பல்வேறு மாவட்டங்களில் கனமழை

சென்னை: தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ் அல்லாத அரசு துணைச் செயலர்கள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: ஐஏஎஸ் அல்லாத அரசு துணைச் செயலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உள்ளத்தை குளிரவைக்கும் ராஜபானம்

தமிழ்நாட்டின் நகரங்களில் தனக்கெனத் தனித்த சிறப்புகளையும் அடையாளங்களையும் உடையது மதுரை மாநகர். அத்தகைய சிறப்பு அடையாளங்களில் ஒன்று ஜிகர்தண்டா.

பெரம்பலூரில் 400 லிட்டர் ஊறல் அழிப்பு: இருவர் கைது

பெரம்பலூர் : இருவேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த 400 லிட்டர் ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்து இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்.

ஊரடங்கு: அஞ்சுகிராமம் அருகே பசியால் வாடும் 180 குடும்பங்கள்

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே போதிய அடிப்படை வசதிகளின்றி 180 குடும்பங்கள் பசியால் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வாயிலாக கரோனா தொற்று இருப்பதைக் கண்டறியலாம்!

கரோனா தொற்று இருப்பதை முன்கூட்டியே வாட்ஸ்அப் வாயிலாக எக்ஸ்ரே மூலம் கண்டறியும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jun 3, 2021, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details