தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM - SINAM MOVIE

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM

By

Published : Jun 28, 2021, 7:09 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய ராசிபலன் - ஜூன் 28

நேயர்களே, ஜூன் 28ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகை கடைகளை இன்று முதல் (ஜூன் 28) திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி அமைச்சரவை: பெருமையும் வேதனையும்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒருவர் அமைச்சராகியிருப்பதாக கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

புதுச்சேரி அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரியில் நேற்று புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 40 குழந்தைகளுக்கு கரோனா

காஞ்சிபுரம் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்கனவே நான்கு பேருக்கு கரோனா பாதித்த நிலையில், நேற்று (ஜூன் 27) மேலும் 40 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

'ஸ்டாலினுக்கு நன்றி!' - ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு

செய்தி ஊடகங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேற்று (ஜூன் 27) நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.

பிரபல ரவுடி சிடி ரவி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

2ஆவது மாடியில் வேப்பிலை பறிக்க முயற்சி: தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பெரம்பூரில் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து இரண்டு பேர் மரத்திலிருந்த வேப்பிலையைப் பறிக்க முயன்றபோது அங்கிருந்து தவறி விழுந்துள்ளனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விரைவில் திரையில் "சினம்"

சினம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details