தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM - அமைச்சர் சி.வி. கணேசன்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

E TV Bharat Top 10 News@7AM on june 12
E TV Bharat Top 10 News@7AM on june 12

By

Published : Jun 12, 2021, 7:03 AM IST

இன்றைய ராசி பலன் - ஜூன் 12

நேயர்களே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (ஜூன் 12) உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாட்டை காக்கும் நிகிதா!

“நீ என்னை காதலிப்பதாக பொய் சொல்வாய்... உண்மையில் நாட்டைத்தான் நீ காதலித்தாய், மக்களுக்காக நீ உனது உயிரையே கொடுத்துள்ளாய், உன்னை நான் இறுதி மூச்சுள்ள வரை விரும்புவேன். என்னகாக யாரும் ஆதங்கப்படவேண்டாம் எனக் கூறுவேன். பதிலாக அவர்களை உனக்கு வீரவணக்கம் செலுத்தவே நான் சொல்வேன்”- எல்லையில் வீரமரணத்தை தழுவிய மேஜர் விபூதி சங்கர் தோந்டியாலின் மனைவியான நிகிதாவின் வார்த்தைகள் இது.

நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மோடியைச் சந்திக்கும் ஸ்டாலின்!

ஜூன் 17ஆம் தேதி, டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.

காவிரியில் தண்ணீர் திறப்பு: நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை உறுதிசெய்யுமாறு ஒன்றிய நீர்வள துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

’யானை வலசை பாதைகள் சூழ் இடங்கள் தனியார் காடாக அறிவிப்பு’ - இதற்கான முக்கியத்துவம் என்ன?

யானைகள் செல்லும் வலசை பாதைகள் உள்ள இடங்கள் சேர்த்து 1,049 ஹெக்டேர் நிலப்பகுதியை தனியார் நிலக் காடாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இது யானைகளின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம் என்று குறிப்பிட்டு, ஆட்சியரின் உத்தரவிற்கு பாராட்டுகள் தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ட்வீட் செய்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி. கணேசன்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்தாண்டில் 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு , பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: ஆவடி தாலுகாவுக்குள்பட்ட மோரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) பணியாற்றி வந்த தங்கமணி கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

'கரோனா தடுப்பூசி போடலனா சிம்கார்டு கனெக்ஷன் கட்!'

கரோனா தடுப்பூசி செலுத்திட ஆர்வம் காட்டாதவர்களின் சிம்கார்டு இணைப்புத் துண்டிக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.

லட்சத்தீவு நிர்வாகியை விமர்சித்த கேரள நடிகை மீது தேசத்துராக வழக்கு பதிவு!

எர்ணாகுளம் (கேரளா): நடிகையும் சமூக ஆர்வலருமான ஆயிஷா சுல்தானா, பிரபுல் படேலை ’பயோ வெப்பன்’ என விமர்சித்ததோடு, தான் குறிப்பிட்ட நாட்டையோ அல்லது அரசாங்கத்தையோ பற்றி பேசவில்லை என தனது நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details