தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 PM

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

E TV Bharat TOP 10 NEWS @ 7 PM on may26
E TV Bharat TOP 10 NEWS @ 7 PM on may26

By

Published : May 26, 2021, 7:03 PM IST

'தமிழ்நாட்டில் இதுவரை 256 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை 256 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது' - துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் இரண்டாவது முறையாக இன்று விசாரணை!

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஆசிரியருக்கு உடந்தையாக 3 பேர் இருந்தார்களா? புகார் அளித்தும் முன்பே நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அப்பள்ளியின் முதல்வரிடம் இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்தப்பட்டது.

'ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்.எஸ். பாரதியின் உறவினர்' - பரவி வரும் செய்தி குறித்து புகார்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளரின் உறவினர் என பொய்யான தகவலை பரப்பி வரக்கூடிய நபர் மீது திமுக வழக்கறிஞர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

'ஜுன் 15 வரை பயணிகள் சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு' - தென்னக ரயில்வே

பயணிகள் வரத்து குறைவால் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்த பல்வேறு சிறப்பு ரயில்கள் மேலும் ஜுன் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

'காற்றின் வேகத்தால் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்' - தென்னக ரயில்வே

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (மே.26) இயக்கப்பட இருந்த ரயில்களின் புறப்படும் நேரம் காற்றின் வேகத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

புத்த பூர்ணிமா தினத்தில் தலாய் லாமா சொன்ன சேதி தெரியுமா?

புத்த மதத் தலைவர் தலாய் லாமா புத்த பூர்ணிமா தினத்தன்று வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

என் பள்ளி காலத்தை நினைத்தால் நெஞ்சம் பாரமாகிறது - நடிகை கெளரி கிஷன்

சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளியில் நடந்த கொடுமைகளைப் போன்று, தானும் அடையாறில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அனுபவித்துள்ளதாக நடிகை கெளரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் இமயம்

சென்னை: இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் வைத்து கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (மே 26) செலுத்திக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details