தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS @ 7AM
TOP 10 NEWS @ 7AM

By

Published : Jun 25, 2021, 6:56 AM IST

லண்டன் செல்கிறாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிக்கையில் வெளிப்படைத்தன்மை கோரி கடிதம்!

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA)அறிவிக்கை 2020 வரைவை இறுதி செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மை கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு 100-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை

250 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

'வாடகை வாகனங்களுக்கான தவணை தொகையை கட்ட ஒரு வருட கால அவகாசம் வேண்டும்'

வாகன கடனுக்கான தவணை தொகையை கட்ட ஒருவருடம் கால அவகாசம் அளிக்காவிடில், சுமார் 25 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என சாலை போக்கவரத்து தலைவர் ஆறுமுக நயினார் தெரிவித்தார்.

'சிறு துறைமுகங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசு'

சிறுதுறைமுகங்களுக்கான புதிய சட்ட முன்வடிவில் ஒன்றிய அரசு முழு அதிகாரம் பெறும் வகையில் உள்ளது. அவ்வாறு அமைந்தால் ஒன்றிய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கும் நிலை உருவாகும். இவை மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் எனத் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

ஆண் உடையில் ஆட்டோ ஓட்டும் பஞ்சாப் பெண்!

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தங்களது துறைகளில் தற்போது சாதித்துவருகின்றனர். இதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் பஞ்சாபின் பத்தின்டா மாவட்டத்திலுள்ள பாங்கி நகரில் வாழும் சிந்தர் பால் கவுர். இவர் பெரும்பாலும் சீக்கிய ஆண்களைப் போல் தலையில் டர்பன், குர்தா அல்லது பைஜாமா அணிந்து ஆட்டோ ஓட்டுகிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து- சட்டப்பேரவை தேர்தல்- மோடி கூட்டத்தில் காங்கிரஸ் 5 கோரிக்கை!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காஷ்மீர் தலைவர்களை முதல் முறையாக சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் சார்பில் மீண்டும் மாநில அந்தஸ்து, சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

நாகத்துடன் வாழும் நாகனஹள்ளி மக்கள்!

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கே ஒரு ஊரே பாம்புடன் சகஜமாக வாழ்ந்துவருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை பாம்பை பார்த்து பயம்கொள்வதில்லை. மாறாக பிடித்து விளையாடுகின்றனர்.

துப்பாக்கி 2: தளபதிக்கு பதில் உலக நாயகன்?

ஒருவேளை அந்த வாய்ப்பு கமல்ஹாசனுக்கு கிடைத்தால், விஸ்வரூபம் படத்தில் கழட்டி வைத்த ராணுவ உடையை அவர் மீண்டும் அணிய வேண்டியிருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி: மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44ஆவது வருடாந்திர கூட்டத்தில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகப்படுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details