தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM

ஈ டிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM

By

Published : Jun 18, 2021, 7:37 AM IST

Updated : Jun 18, 2021, 7:43 AM IST

கனவு காதல் இணையை நேரில் சந்திக்க வாய்ப்பு: இன்றைய ராசிபலனிலிருந்து...!

நேயர்களே, ஜூன் 18ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்!

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விரிவான பதில் அளித்தார்.

சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் - அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி!

அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடந்த மாவட்ட செயலாளர்கள், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சிக்கு எதிராக சதிவேலையில் ஈடுபடுவதாகக் கூறி சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!

பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபா தாத்தாவைப் போல்தான் கட்டிப்பிடிப்பார் என சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் அஸ்பயர் சுவாமிநாதன்!

சென்னை: அதிமுக சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் ஜூன் 16ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் வைத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்றுமுதல் (ஜூன் 17) விடுவிக்கப்படுகிறார் எனத் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருநீர்மலை பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

திருநீர்மலை பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்கலாம், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்!

திருவண்ணாமலை: புகார் அளித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, இருந்த இடத்திலிருந்தே பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக வாட்ஸ்அப் வசதி கொண்ட செல்போன் எண்ணை அறிவித்துள்ளார்

பஞ்சாப் நர்ஸிங் தோட்டம்!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார் சப்னா சவுத்ரி. இவர் தனது வீட்டில் ஒரு தனித்துவமான தோட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் தோட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் நடப்பட்டுள்ளன. மனதுக்கு உத்வேகம் அளிக்கும் அவரின் கதையை நாம் பார்க்கலாம்.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் மாயமாகியுள்ளனர். அதில் மூவர் இந்தியர்கள் ஆவார்கள்.

கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?

'ஐபிஎல் லெவலுக்கு பில்டப் கூடுக்குறாங்கப்பா' என இன்றைய சிறுவர்கள் இந்தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதுக்கும் மேல என்பதுதான் டெஸ்ட் வெறியர்களின் வெளிப்பாடு.

Last Updated : Jun 18, 2021, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details