தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - 'குக் வித் கோமாளி' சிவாங்கி

ஈ டிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

By

Published : May 25, 2021, 3:06 PM IST

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தில் 5 பேருக்கு சம்மன்

பாலியல் புகாரில் சிக்கிய பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்!

நாளை முதல் ட்விட்டர், பேஸ்புக் முடக்கமா?

மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்தாத வாட்ஸ்அப், ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் நாளை முதல் செயல்படுமா, இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாகும் 'யாஷ்'

"யாஷ்" புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன திட்டம்: அறிக்கைத் தாக்கல் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு!

சென்னை: நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து கோவை, சென்னை மண்டல உள்பட 16 மாவட்ட அலுவலர்களுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் வருகை!

சென்னை: சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக 140 டன் ஆக்சிஜன் இன்று (மே.25) தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தது.

சென்னையில் 1,236 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை!

சென்னை: ஆயிரத்து 236 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா பரிசோதனைக்கு 'நோ': இளைஞர் மீது தாக்குதல்!

பெங்களூரு: கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த இளைஞரை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் சரமாரியாக அடித்த காணொளி, சமூக வலைதளத்தில் தற்போது வைரலானது.

கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை பரவலைத் தொடர்ந்து, தற்போது மஞ்சள் பூஞ்சை பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

#HBD கார்த்தி: பருத்தி வீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழ் சினிமாவின் பிரபலமான சில இளம் இயக்குநர்கள் நடிகர் கார்த்தியை வைத்தே பிள்ளையார் சுழி போட்டனர்.

'குக் வித் கோமாளி' சிவாங்கிக்குப் பிறந்த நாள்! #HBDSivaangi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கிக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details