தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - வீட்டிலிருந்தே கரோனா பரிசோதனை

ஈ டிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

By

Published : May 20, 2021, 3:12 PM IST

Updated : May 20, 2021, 3:18 PM IST

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மீதான அறிக்கை: அரசிடம் அடுத்தவாரம் சமர்ப்பிக்கிறார் நீதிபதி கலையரசன்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை விசாரணை அலுவலரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் அடுத்தவாரம் அரசிடம் சமர்ப்பிக்கிறார்.

கறுப்பு பூஞ்சையால் நோயாளி மரணம்? - சுகாதாரத் துறை மறுப்பு!

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளி கறுப்பு பூஞ்சை பாதிப்பால் இறந்ததாக உறவினர்கள் கூறிய நிலையில், அதனை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

'ஒரு தொகுதிக்கு 200 படுக்கையைத் தயார் செய்ய நடவடிக்கை' அமைச்சர் சேகர் பாபு !

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து தொகுதியில் முதலில் 100 படுக்கையை உருவாக்க திட்டமிட்டோம். தற்போது ஒரு தொகுதிக்கு 200 படுக்கையை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செயவதற்கான கட்டணத்தைக் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

’கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு’ - சமூக நலத்துறை செய்தி வெளியீடு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உதவிகள், சேவைகள் குறித்து சமூக நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று: தமிழ்நாட்டில் 80 காவலர்கள் உயிரிழப்பு!

கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 80 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம்: இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு பெய்யும்!

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சைத் தாக்குதல்: ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

சென்னை: கருப்பு பூஞ்சை என்கிற புதிய தொற்றுத் தாக்குவதாகத் தகவல்கள் வருவதால், அதைத் தடுப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்போட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி: முகாமைத் தொடங்கி வைத்த தமிழிசை

புதுச்சேரி: இன்று (மே.20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்தார்.

வீட்டிலிருந்தே கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் - புதிய கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி!

வீட்டிலேயே கரோனா தொற்றைக் கண்டறியும் 'மைலாப் டிஸ்கவரி சொலியூஷன்ஸ்' நிறுவனம் தயாரித்த புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதியளித்துள்ளது.

Last Updated : May 20, 2021, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details