தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின்  1  மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Feb 18, 2021, 1:23 PM IST

தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார். தமிழிசை தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார், அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசியப் பாதுகாப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார்.

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் - தமிழிசை

புதுச்சேரி: ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தளிக்கப் போகிறாரா 'டாக்டர்' தமிழிசை?

தனது செயல்பாடுகளால் அதிகம் எதிர்ப்பை சம்பாதித்த கிரண்பேடியை நீக்கிவிட்டு, தமிழ் தெரிந்த ஒருவரை புதுச்சேரிக்கு ஆளுநராக நியமித்திருப்பது புதுச்சேரி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான பாரதிய ஜனதாவின் ராஜதந்திரமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'அதிமுக பணபலம், படைபலம் காட்டலாம்; அதை எதிர்க்கும் வல்லமை திமுகவிற்கு உண்டு'

வேலூர்: சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பணபலம், படைபலம் காட்டலாம்; அதைத் தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை திமுகவினருக்கு உண்டு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் வேதனை குற்றச்சாட்டு: ராகுலுக்குத் தவறாக மொழிபெயர்த்த நாராயணசாமி!

'அவரே இருக்காரு, எங்கள வந்து ஒருக்காலமாவது புயலுக்கு வந்து பார்த்திருக்காரா?' என்ற மூதாட்டியின் வேதனை தோய்ந்த கேள்வியை முதலமைச்சர் நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'மக்கள்தான் முதலமைச்சர்; அவர்கள் சொல்லும் பணியைச் செய்வதே என் கடமை' - எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி: என்னைப் பொறுத்தவரையில் மக்கள்தான் முதலமைச்சர், நீங்கள் சொல்லும் பணியைச் செய்வதே என் கடமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவி திடீரென மயங்கிவிழுந்து உயிரிழப்பு!

கோவை: வடவள்ளி அருகே தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 54% சாலை விபத்துகள் குறைவு: மாநகர காவல் ஆணையர்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 54 சதவிகித சாலை விபத்துகள் குறைந்துள்ளன என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மாடு முட்டியதில் இளைஞர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

புதுக்கோட்டை: கல்லூர் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஐபிஎல் ஏலம்: அணிகளின் உத்தேச வீரர்கள் தேர்வு விவரம்!

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான குறைந்த அளவிலான வீரர்கள் ஏலம் இன்று (பிப். 18) சென்னையில் நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details