தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM - செந்தில் பாலாஜி

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

By

Published : Jun 26, 2021, 1:11 PM IST

ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரருக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

'டெல்டா பிளஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்!’

சென்னையில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்!

போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா கிராமப்புற மாணவர்களுக்கு கரோனா காலத்தில் உதவிடும் வகையில் அனிமேஷன் நுட்பத்தைப் பயன்படுத்தி பாடநூலை உருவாக்கித் தந்தும், கிராமப்புற கலைஞர்களைப் போல் வேடமிட்டும் கரோனா விழிப்புணர்வு நல்கி வருகிறார். இந்த ஆசிரியையின் அறப்பணி குறித்து காண்போம்.

அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!

கரூர் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திமுகவில் இணைந்தனர்.

கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை!

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா மையத்திற்குள் திரியும் நாய்கள்: புகார் காணொலி வெளியிட்ட பெண்

கோயம்புத்தூர் கொடிசியா வளாகம், கரோனா சிகிச்சையளிக்கும் பிரதான மையமாகச் செயல்பட்டுவருகிறது. அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஒருவர் இணையதளத்தில் புகார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தையின் கடையை நடத்திவரும் 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம்!

குடும்ப வறுமை காரணமாக தனது தந்தை நடத்திவந்த கடையை நடத்திவரும் 13 வயது சிறுவனுக்கு வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை குழுத் தலைவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கரோனா ஊரடங்கு: யூகலிப்டஸ் தைலம் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கரோனா ஊரடங்கால் பாதிப்படைந்த நீலகிரி யூகலிப்டஸ் தைலம் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம்: பொதுமக்கள் எதிர்ப்பு

மயிலாடுதுறையில் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி ஷேல் எரிவாயு அமைக்கும் பணிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details