தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @9AM - UTTARKANT

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 20, 2021, 9:17 AM IST

Updated : Jun 20, 2021, 9:24 AM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அதிமுகவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

'இது தந்தையின் தாலாட்டு' - தந்தையர் தின ஸ்பெஷல்..

சில பிள்ளைகள் அப்பாவின் பேச்சை அச்சுப் பிசையாமல் பின்பற்றுவார்கள். சிலர் அப்பா எது சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வர். ஆனால் அப்பாவின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் வெளிகாட்ட முடியாத அளவிற்கு அவர்களின் மனதில் பரவிக் கிடக்கும்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை!

கோவிட் பெருந்தொற்று பரவலின் மூன்றாவது அலை அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் வரக் கூடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா (Randeep Guleria) எச்சரித்துள்ளார்.

கர்நாடகா ஊரடங்கு: 16 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள்!

கர்நாடக மாநிலத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான தொற்று பாதிப்பு இருக்கும் 16 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மைசூரு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.


உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி இருவர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

கரோனா ஊரடங்கு: உ.பி.யில் தளர்வு, கோவாவில் நீடிப்பு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

’70 வயதுக்கு மேற்பட்ட சிறைவாசிகளுக்கு பிணை கொடுங்கள்’ - மேதா பட்கர் மனு

சிறைச்சாலைகளில் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு பிணை வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.

’நீயா, நானா’ - புதுவை பாஜகவில் அமைச்சர் பதவிக்குப் போட்டி!

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவி பெறுவதில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதால் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது.

’ஆடை தேவையில்லை, ஹேட் போதும்’ - ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த ஷாமா!

சன்னி லியானை தொடர்ந்து, பிரபல சின்னத்திரை நடிகை ஷாமா சிக்கந்தர், ஆடை எதுவும் அணியாமல் தொப்பியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஓடிடி தளத்தில் வெளியாகும் தேன்!

சென்னை: நடிகர் தருண்குமார் நடித்துள்ள ’தேன்’ திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Jun 20, 2021, 9:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details