சென்னை: தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்ய நாளை (மே 17) முதல் இ-பதிவு கட்டாயம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மாவட்டங்களிடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்!
தமிழ்நாடு அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகள் மே 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்டங்களுக்கிடையேயும், மாவட்டத்துக்குள்ளேயும் பயணம் செய்ய இ-பதிவு அவசியம் என அரசு ஆணையிட்டுள்ளது.
மாநிலத்தில் கரோனா பரவலை தடுத்திட, மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. இருப்பினும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு, மே15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதில் திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பயணிக்க இ -பதிவு நாளை (மே 17) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.