தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்குவோர் மீதும், விதிமுறைகளை கடைபிடிக்காதோர் மீதும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். வாகன ஓட்டிகள் செய்யும் குற்றத்திற்கு ஏற்றவாறு அலுவலர்கள் இ-சலான் கருவி மூலம் அபராத தொகை விதித்து வருகின்றனர். இந்த இ-சலான் கருவியை போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கருவியை செக்கிங் இன்ஸ்பெக்டர், ஆர்டிஓக்களுக்கும் வழங்கவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது தவிர போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ள இணையதளம் வாயிலாக ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்டவைகளுக்கு வீட்டில் இருந்தே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் ஆர்.டி.ஓ அலுவலங்களில் போக்குவரத்து அலுவலர்களை நேரில் சென்று உரிய பரிசோதனைகளுக்கு பிறகு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ், ஆர்சி புக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.