ஜ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் சேகர். தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவருகிறார்.இவர் மார்ச் 3ஆம் தேதி சென்னை கேரஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 'டிப் டாப் ஆசாமி' சேகரை வழிமறித்துள்ளார். தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் விசாரணை நடத்தியுள்ளார்.
இதில் அவர், 'காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையெழுத்து போட்டு விட்டு போ' என சேகரை அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய சேகர் அவருடன் சென்றுள்ளார். லோகோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, சேகரிடம் 3,000 ரூபாயை பறித்து அந்நபர் தப்பியுள்ளார்.
இதுகுறித்து சேகர் ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்காமல் ஒரு வார காலத்திற்கு பணம் பறித்தவரை பிடித்து பணத்தை மீட்பதாக தெரிவித்துள்ளார்.