இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதனால் தான் சென்னை மெட்ரோ ரயிலில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லி மெட்ரோ ரயிலில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விட்டு ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் விபத்துக்குக் காரணம் இதுதான்! - சிஐடியு தகவல் - அவுட்சோர்சிங்
சென்னை: ஒப்பந்த தொழிலாளர் முறைக்குப் பின்னரே சென்னை மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு தலையிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள் தகுதியும், திறமையும் பெற்றுள்ளனரா என்பது குறித்த முறையான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மெட்ரோ ரயில் ஓட்டுநர்களும் கூட ஒப்பந்த முறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பின்பு தான் விபத்துகள் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான மின்சாரத்தை வழங்கும் குறை மின்னழுத்த மின் மாற்றி அதிகாலையில் வெடித்து ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.