சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் நாளை (ஆக 21) ஓணம் பண்டிகை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வழக்கமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில் முன்பதிவு நிலையங்கள் செயல்படும்.