இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
இணையதள பத்திரிகையாளர் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்! - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை: மருத்துவப் பணியாளர்களின் குறைகள் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
அவர் மீதான நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.