டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய குடிமைப்பணிகள் (IAS) தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து - Selection of Indian Civil Servants
சென்னை: இந்திய குடிமைப்பணிகள் (IAS) தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்- டிடிவி தினகரன்
இத்தேர்வில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பலர் சாதனை புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளான செல்வி. பூரண சுந்தரி, திரு.பால நாகேந்திரன் போன்றோர் ஐ.ஏ.எஸ் தேர்வில் பெற்றிருக்கும் வெற்றி, பலருக்கும் ஒளிவிளக்காக திகழும். அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.