தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருந்துப் பொருள்கள் பெட்டியிலிருந்த போதை மாத்திரைகள்: பறிமுதல்செய்த சுங்கத் துறையினர்

சென்னை: நெதா்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானத்தில் சென்னைக்கு வந்த பாா்சலில் ரூ. 4 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை சென்னை விமானநிலைய சுங்கத் துறையினா் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

By

Published : Nov 2, 2020, 7:16 PM IST

Drugs in a medicine box: Seized by customs
Drugs in a medicine box: Seized by customs

நெதா்லாந்து நாட்டிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்திருந்த கொரியா் பாா்சல்களைச் சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அப்போது சென்னை முகவரிக்கு வந்திருந்த இரண்டு பாா்சல்களில் மருந்துப்பொருள்கள் இருப்பதால், காலதாமதம் செய்யாமல் விரைந்து டெலிவரி செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சுங்கத் துறையினருக்கு அந்த இரண்டு பாா்சல்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பாா்சல்களை தனியே எடுத்துவைத்து ஆய்வு செய்தனா். அப்போது அந்த பாா்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகள், போன் நம்பா்கள் அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது.

இதையடுத்து பாா்சல்களை பிரித்து சோதனை செய்தபோது ஒவ்வொரு பாா்சலிலும் தலா 50 போதை மாத்திரைகள் வீதம் மொத்தம் 100 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.4 லட்சம். இதையடுத்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details