தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெதர்லாந்து, கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் - புலன் விசாரணை

நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியன சுங்கத் துறை அலுவலர்களால் பறிமுதல்செய்யப்பட்டது.

பார்சலில் வந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றி சுங்கத்துறை விசாரணை
பார்சலில் வந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றி சுங்கத்துறை விசாரணை

By

Published : Dec 11, 2021, 10:03 AM IST

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலைய சரக்ககப் பிரிவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்த கொரியா் பார்சல்களை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து ஐந்து பார்சல்கள் வந்திருந்தன.

அந்த பார்சலில் வாழ்த்து அட்டை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் பார்சலை சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்துப் பார்த்தனர். அப்போது சென்னை, திருச்சி முகவரிக்கு வந்த மூன்று பார்சல்களில் ரூ. 3.15 லட்சம் மதிப்புள்ள 23 கிராம் எடை கொண்ட 63 நிற போதை மாத்திரைகள் இருந்தன.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள்களுடன் வந்த பார்சல்

சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை

நெதர்லாந்து நாட்டிலிருந்து திருவண்ணாமலை முகவரிக்கு வந்த பார்சலில் 50 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து கிராம் மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கனடா நாட்டிலிருந்து சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் 57 கிராம் எடை கொண்ட உயர் ரக கஞ்சா இருந்தது. ஐந்து பார்சல்களிலிருந்து வந்திருந்த ரூ. 3. 65 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

இது தொடர்பாக சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய முகவரியில் விசாரித்தபோது போலியானது எனத் தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டுவந்தன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: Helicopter Crash தொடர்பாக முப்படை விசாரணை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details