சென்னை:தாம்பரம் சேலையூர் தனியார் பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி மாணவர்கள் இடையே உரையாற்றினார். "உழைப்பிற்க்கும் கடின உழைப்பிற்கும் உள்ள வித்தியாசமே முதன்மையான மாணவர்களாக உங்களை மாற்றும்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மதிப்பெண்களுக்காக உங்களை ஓட சொன்னாலும் நீங்கள் புரிந்து படியுங்கள். அது உங்களுக்கு மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு நாள் 1200 பக்கங்கள் படித்தாலும் புரிந்து படிக்கவில்லை என்றால் எந்த பயனும் இல்லை, நீங்கள் படித்ததை பயப்படாமல் எழுதுங்கள். ஒழுக்கத்தையும் கற்று கொள்ளுங்கள். ஒழுக்கத்தை கற்காமல் என்ன பயின்றாலும் அது பயனற்று போகும்" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, "மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தாலும் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது தைரியமாக இருக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் இருக்கிறாதா என்பதை குழுக்கள் அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் கடந்த 15 நாட்களில் அதிக அளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளோம்.