சென்னை மாதாவரம் தெற்கு பகுதியில் 32ஆவது வட்டத்தில் நேதாஜி தெரு சுவற்றில் 45 ஆண்டுகளாக கருணாநிதி புகைப்படத்தை திமுகவினர் வரைந்துவருகின்றனர். அதே கட்டடத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சென்னை சிவா வாடகைக்கு குடிவந்தார். அவர் வந்த சில மாதங்களிலேயே அங்கு பாஜக அலுவலகம் திறக்கப்பட்டது.
இன்று, கருணாநிதி உருவப்படத்திற்கு நெற்றியில் இந்த முழு சுவர் பாஜகவுக்கு மட்டும் என பாஜகவினர் எழுதினர். தகவலறிந்த திமுக 32ஆவது வட்ட செயலாளர் குட்டி மோகன், பாஜக அலுவலரிடம் கேள்வி கேட்டபோது வாக்குவாதம் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புழல் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாஜகவினரையும் திமுகவினரையும் சமாதானம் பேசி காவல்துறையினர்
அனுப்பி வைத்தனர். வீட்டு உரிமையாளர் திமுக பிரமுகர் என்று தெரியவந்தது.
சுவற்றுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வீட்டு உரிமையாளர் சிவாவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “காலம் காலமாக இந்த சுவர் திமுகவிடம்தான் உள்ளது. ஆதலால் வருங்காலத்திலும் திமுகவிடம்தான் இருக்கும்” என்றனர்.
திமுக - பாஜக கட்சிகளுக்கு இடையே மோதல்: தொடங்கும் சுவர் அரசியல் - தொடங்கும் சுவர் அரசியல்
அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திராவிட கட்சியை முறியடிக்க கட்டட சுவர்கள் பிடிப்பில் பாஜக களமிறங்கியுள்ளது.
dmk
வருகிற தேர்தல் காலத்தில் திராவிட கட்சியை முறியடிக்க கட்டட சுவர்கள் பிடிக்கும் பணியில் பாஜக களமிறங்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
TAGGED:
தொடங்கும் சுவர் அரசியல்