தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடிகால் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன - துணை மேயர் மகேஷ்குமார்!

மழை நீர் தேங்காத வகையில் மாநகர் முழுவதும் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

drainage
drainage

By

Published : May 10, 2022, 10:40 PM IST

சென்னை: சென்னையில் ஓரிரு நாட்கள் மழை பெய்தாலும், தாழ்வான பகுதிகளான தியாகராய நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரியாக மழை நீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஆண்டு சென்னை முழுவதும் மழைநீர் எங்கெல்லாம் தேங்கியதோ, அந்த இடங்களில் பருவமழை தொடங்கும் முன்பே சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் மழை நீர் சூழ்ந்தது போல இந்த ஆண்டு ஏற்படாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் தமிழ்நாட்டில் 37 மருத்துவக் கட்டடங்களை விரைவில் திறந்து வைப்பார்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details