தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு - தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு

By

Published : Jun 10, 2020, 3:19 PM IST

தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள், 1997, விதி-4ன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் பார்கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் தகுதியுள்ள முத்தவல்லிகளின் பட்டியல் பெறப்பட்டு, தமிழ்நாடு வக்ஃப வாரியத்திற்கு மேற்கண்ட வகைகளில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு வரைவு வாக்காளர்
பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இஸ்லாமிய உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் இன்று (10.06.2020) தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துதல்) விதிகள் 1997, விதி 5-ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அதில்" வரைவு வாக்காளர் பட்டியலில் சேரத் தகுதியுள்ள எந்தவொரு நபராவது தங்களின் பெயர் சேர்க்கப்பட்டது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பான ஆட்சேபனைகளை இவ்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அதாவது 17.06.2020 மாலை 3.00 மணிக்குள் தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு பெறப்படும் ஆட்சேபனைகளை ஆய்வு செய்து உரிய ஆணைகள் தேர்தல் அலுவலர்களால் வெளியிடப்படும். அவை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை தனியே வெளியிடப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தேர்தல் அலுவலரால் தமிழ்நாடு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு
தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009, அனைத்து மண்டல வக்ஃப கண்காணிப்பாளர்களின் அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details