சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2022) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்செய்துள்ளார்.
சென்ற ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லாத டிஜிட்டல் வடிவில் நிதிநிலை அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,
- நீண்டகாலக் கனவாக இருந்துவரும் கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி வடிவம் பெற்றது
- விவசாயிகளின் விளைபொருள்களுக்கான ஆதார விலையை உறுதிப்படுத்த 2.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில மொழிகள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு
- நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக ஆர்.பி.ஐ. மூலம் டிஜிட்டில் கரன்சி அறிமுகம்
- டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்
- சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்
- இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்
- 2022-23ஆம் நிதி ஆண்டு சிறுதானிய வளர்ச்சிக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பது
- நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும்.
- 68 விழுக்காடு ராணுவத்தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்
- இளைஞர்களுக்காக 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்