இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கை குறைவு - 1,706 ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு! - பட்டதாரி ஆசிரியர்
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
teachers
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததன் அடிப்படையில் 1,706 பணியிடங்கள் அரசுக்கு திரும்ப ஒப்படைக்கபட்டுள்ளன. இந்தப் பணியிடங்களில் இனிமேல் ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் உயர்மட்ட குழு அனுமதி எப்போது?