சென்னை மதுரவாயல் ஏரிக்கரை தனலட்சுமிநகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், வேளச்சேரியைச் சேர்ந்த செல்வியம்மாள் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பு மதன்குமார் வேலைக்கு செல்லாமல் வரதட்சணை கேட்டு செல்வியம்மாளை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வியம்மாள், 2015ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வரதட்சனை கொடுமை வழக்கு - கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக மதன்குமார், அவரது தந்தை சடகோபன், தாயார் செந்தாமரை ஆகியோர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட மதன்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மதன்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சடகோபன், செந்தாமரை ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்டங்கள் - மத்திய அமைச்சருடன் ஏ.வ.வேலு சந்திப்பு