தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆவடியில் இரட்டைக் கொலை - தீவிரத் தேடுதலில் காவல் துறையினர் - தீவிர தேடுதலில் காவல் துறையினர்

ஆவடி காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ஆவடியில் இரட்டை கொலை
ஆவடியில் இரட்டை கொலை

By

Published : Mar 13, 2022, 3:35 PM IST

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட O.C.F. மைதானத்தில் இரவு 12:00 மணியளவில் ஆவடி கௌரிபேட்டை மசூதி தெருவைச் சேர்ந்த, மீன் வியாபாரி அசாருதீன் (27), ஆவடி வசந்தம் நகர்ப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் (29) ஆகிய இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடி காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் அருகே நடந்த இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அசாருதீன் மற்றும் சுந்தர் இருவரும் முகத்தில் வெட்டுபட்ட நிலையில் இறந்துகிடப்பதாக அசாருதீனின் தந்தை அக்பர்பாஷா ஆவடி காவல் நிலையத்திற்கு அளித்த தொலைபேசி தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்துவிட்டு உடலை ஆவடி பகுதியில் வந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் வீசிவிட்டு சென்றார்களா... இல்லை OCF மைதானத்தில் தான் இந்த கொலை சம்பவம் நடந்ததா என இரண்டு கோணத்திலும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நடந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியைச் சேர்ந்த ஜெகன் (30), யாசின் (26) என இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்...தீக்குளித்த ஓட்டுநர்...வெளியான சிசிடிவி காட்சி...

ABOUT THE AUTHOR

...view details