தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெடிகுண்டு வைத்து தாயை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் - Perambalur blast case

சொத்துக்காக தாயை வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில், மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

order
order

By

Published : Feb 17, 2022, 9:16 PM IST

பெரம்பலூர்:வேப்பந்தட்டை அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (74). இவருக்கு மூன்று மகன் மற்றும் இரண்டு மகள்கள். இளைய மகன் செல்வகுமார் (42) தன்னை கவனித்துக் கொள்ளாததால், சொத்துக்களை மற்ற மகன்கள், மகள்கள் மீது எழுதி வைத்துவிட்டு, தனியாக வசித்துவந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முத்தம்மாளை வெடிகுண்டு வைத்து கொலை செய்தார்.

இதுகுறித்து உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், செல்வகுமார் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி சரவணன், லூகாஸ் அந்தோணி, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதனிடையே லூகாஸ் அந்தோணி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று(பிப்.17) குற்றம் நிரூபணமானது. இதையடுத்து நீதிபதிகள், செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இந்த குற்றத்தில் பூபதி, சரவணன், மணிகண்டன் ஆகியோருக்கு உள்நோக்கம் இல்லை என்பதால், விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன்?

ABOUT THE AUTHOR

...view details