தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Latest stalin news

முறையற்ற வகையில் நடைபெறும் 'நீட்' தேர்வை, இந்த கரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; மாநில அரசும் இத்தேர்வைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
MK stalin urges to cancel NEET

By

Published : May 5, 2020, 11:37 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'மத்திய அரசு ஜூலை 26ஆம் தேதி 'நீட்' தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர் தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் காரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை.

நாடு இப்போது இருக்கும் பதற்றமான சூழலில், என்ன மனநிலையுடன் மாணவர்களால் இந்தத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு எழுத முடியும்?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்றவை நடந்துள்ளது. முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கரோனா காலத்தில் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பியுள்ளதால், மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்'- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளைத் திறப்பது நியாயமல்ல: மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details