தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பிறந்த நாளன்று வீட்டுக்கு வர வேண்டாம்'- ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்! - Rajinikanth

டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளன்று யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் டிசம்பர் 12 ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் Don't come to home Rajinikanth requests to Fans Rajinikanth அண்ணாத்த
ரஜினிகாந்த் டிசம்பர் 12 ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் Don't come to home Rajinikanth requests to Fans Rajinikanth அண்ணாத்த

By

Published : Dec 6, 2020, 8:18 PM IST

சென்னை: பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் இல்லம் மற்றும் அண்ணாத்த பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் செல்லும் நிலையில் தனது பிறந்த நாளென்று ரசிகர்கள் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்தார். மேலும் தற்போது நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் முழுமையடையாமல் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் செல்லவுள்ளார். முன்னதாக அவர் பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்னையிலிருந்து காரில் சாலை மார்க்கமாக இன்று சென்றார்.

அங்கு ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்தபடி ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்கிடையில், “டிசம்பர் 12ஆம் தேதி, தனது பிறந்த நாள் தினத்தன்று ஹைதராபாத்தில் இருப்பதாகவும், ஆகவே ரசிகர்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவேண்டாம் எனவும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:'யார் வந்தாலும், திமுக வெற்றியை தடுக்க முடியாது'- கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details