சென்னை: சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் தமிழ்நாட்டில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் இன்று (அக்.3) நடந்தது.
சென்னையில், மக்கள் நீதிமன்றத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரான நீதிபதி வினீத் கோத்தாரி தொடங்கிவைத்தார்.
அப்போது அவர், கரோனா தொற்று காரணமாக சிக்கலான காலத்தை நாம் கடந்துள்ளதாகவும், அதற்காக அன்றாட வாழ்க்கையையும், பணிகளையும் நிறுத்தக் கூடாது.
கரோனா தொற்றை கண்டு அச்சப்படாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தகுந்த இடைவெளி பின்பற்றப்பட்டு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில், தமிழ்நாடு முழுவதும் 166 அமர்வுகளில், 83 கோடியே ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரத்து 468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
இதையும் படிங்க:கல் குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை!