சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மளிகைக் கடை வியாபாரியான இவரது மகள் ராஜஸ்ரீ (9) அருகே உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். ராஜஸ்ரீக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் ஸ்டெட்ஃபோர்டு மருத்துவமனையில் சிறுமியின் காதிலுள்ள கட்டியை அகற்ற இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவர்கள் கவனக்குறைவாகக் காதுக்கு பதிலாகத் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
மருத்துவமனையை முற்றுகையிட்ட சிறுமியின் உறவினர்கள் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த சிறுமியைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அறிந்து சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் பெற்றோர், உறவினர், மருத்துவமனை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சிறுமிக்கு தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சிறுமிக்குத் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்சில் எடுக்கப்பட்டுள்ளதால் வருங்காலத்தில் சிறுமிக்குத் தொண்டையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!