சென்னை: தீவிர சிகிச்சை பெற்று இறந்தபிறகு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்களை கரோனா இறப்பு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நபர்கள் மட்டும் குணமடைந்த பிறகு டிஸ்சார்ஜ் ஆகும் முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயம் அனைத்து மருத்துவமனைக்கும் கடிதம் எழுதினார். இது வரவேற்கவேண்டிய ஒன்றுதான் என டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் மருத்துவர் சாந்தி கூறுகையில், "கரோனா தொற்று நோயானது உடலில் 10 முதல் 20 நாள்கள் வரை மட்டுமே இருக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த ஆராய்ச்சியில் நோய் பாதிக்கப்பட்டு பத்து நாள்களுக்கு மேல் அந்த நோயை அந்த நபர்களால் பரப்ப முடியாது என அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மருத்துவர் சாந்தியுடன் காணொலி நேர்காணல் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு பத்து நாள் கரோனா தொற்று பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை பெற்று பிறகு, ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்தால் கிட்டத்தட்ட 17 நாள்கள் ஆகிவிடும். எனவே அவர்களால் நோய் பரப்பும் இடர் இருக்காது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
அதிதீவிர கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு ஆர்டிபிசியல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததும் உறவினர்கள் கையில் அவரது உடலை ஒப்படைக்கின்றனர். இதனால் அந்த உறவினர்கள் எந்த ஒரு அச்சமுமின்றி அந்த உடலை எடுத்துச் செல்கின்றனர் இது ஒரு வகையில் நன்மை தருகிறது.
மறுபுறம் அவர் இறந்த பிறகு ஆர்டிபிசியல் சோதனை பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததும் கரோனா தொற்று இறப்பு எண்ணிக்கையில் அவர்களைச் சேர்ப்பதில்லை, தீவிர சிகிச்சை பெற்று இறந்தபிறகு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்களை கரோனா தொற்று இறப்பு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த ஒரு இறப்பை நம்மால் தவிர்க்க முடியும்.
மேலும் வங்கி, ஊடகம் போன்ற இடங்களில் பணியாற்றும் நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு குணமடைந்த பிறகு, மீண்டும் பணிக்கு வரும்போது அலுவலகத்தில் கரோனா தொற்று நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதை அரசு கருத்தில்கொண்டு அவர்களுக்கென ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
இந்தியாவில் கறுப்புப் பூஞ்சை நோய் அதிகரித்துவருகிறது. அதில் நீரிழிவு நோய் இல்லாதவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் இந்தக் கறுப்புப் பூஞ்சை நோய்க்குப் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதைக் கருத்தில்கொண்டு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கறுப்புப் பூஞ்சை நோய்க்கான அறிகுறி ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடலை அவர்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று இறந்து உடல் உள்ளேயே சில நாள்களுக்கு இருக்கும். அதனால் பரிசோதனை செய்யும்பொழுது கரோனா தொற்று உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்கும். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரு பதினைந்து, இருபது நாள்கள் சிகிச்சை பெற்றால் அது தானாகச் சென்றுவிடும் ஆர்டிபிசியல் பரிசோதனை செய்ய தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை