தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின் - என்னை புகழ்ந்து பேச வேண்டாம்

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி நேரத்தை தன்னை புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : Apr 7, 2022, 12:45 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டாவது நாளாக துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது பேச்சைத் தொடங்கிய, ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும் கட்சியாக தற்போது இருக்கும் போதும், தொடர்ந்து வலியுறுத்துவது உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும், புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம்.

குறிப்பாக ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க முயற்சி - நீர் வளத்துறை தகவல்

ABOUT THE AUTHOR

...view details