1938 -1940 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து மற்றும் தருமாம்பாள் ஆகியோருக்கு சென்னை மூலக்கொத்தலம் மைதானத்தில் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை - வீர வணக்க நாள்
சென்னை: இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திமுக சார்பில் மூலக்கொத்தலத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
heroes
இதனையடுத்து, அங்குள்ள நினைவிடத்தில் இன்று திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து, தருமாம்பாள் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்தித் திணிப்பை எதிர்த்தும், மொழிப்போர் வீரர்களின் தியாகத்தை போற்றியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை - சிவசேனா