சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை (Udhayanidhi Stalin Birthday) முன்னிட்டு, திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்பு பகுதியிலிருந்த நச்சுக் கழிவுகளை திமுகவினர் வெளியேற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி வார்பு பகுதியிலிருந்த நச்சுக் கழிவுகளை கூடைகள் மூலம் எடுத்து வெளியேற்றினர். இதில் நெகிழிப் பொருள்கள், வலைகள், கழிவுப் பொருள்கள் கடலிலிருந்து எடுக்கப்பட்டன.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆலோசனைப்படி, சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் லையன் எம் தீனதயாளன் தலைமையில், ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் முன்னிலையில் கடலில் வார்பு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் தா. இளைய அருணா, மாநிலத் துணைச் செயலாளர் பழ செல்வ குமார் உள்ளிட்ட பலர் இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:மீண்டும் மாநாடுக்கு சிக்கல் - சிம்புவைப் பழிவாங்கும் உதயநிதி?