குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகரில் நேற்று கோலம் வரைந்த 6 பெண்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கும் பதிந்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காவல் துறையின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, மகளிரணியினர் அனைவரும் தங்கள் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் வரைந்து எதிர்ப்பை பதிவு செய்யும்படியும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, கனிமொழியின் சென்னை, தூத்துக்குடி இல்லங்களின் வாசல்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டுள்ளது.