தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘நான் 11 படங்கள் நடித்துவிட்டேன்’ - முதலமைச்சருக்கு உதயநிதி பதில்! - உதயநிதி

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயம் வெற்று பெறுவார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி

By

Published : Aug 4, 2019, 3:37 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயம் வெற்றிபெறுவார். நானும், கழக உடன்புறப்புகளும் கிராமம் தோறும் சென்று பரப்புரை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

மேலும் நான்கு படங்களில் நடித்துவிட்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலின் பதவி வாங்கிவிட்டார் என முதலமைச்சர் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, நான் இதுவரை 11 படங்களில் நடித்துவிட்டேன். அதற்கு மேல் அவருக்கு பதில் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details