தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் பரிசில் செய்த முறைகேடு உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் - ஜெயகுமார் - எடப்பாடி பழனிசாமி

விடியா அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர், பொங்கல் பரிசில் செய்த முறைகேடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

AIADMK Ex minister Jeyakumar slams DMK, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
AIADMK Ex minister Jeyakumar slams DMK

By

Published : Jan 28, 2022, 11:00 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன. 28) நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அரசு பணியாளரை தாக்கிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவினர் பொது மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் சுமார் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அதிருப்தி இருக்கிறது. நிச்சயமாக இது தேர்தலில் எதிரொலிக்கும். விடியா அரசின் செயல்பாடுகளால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது. அவர்களுக்குத்தான் நஷ்டம். அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூட்டணியில் தொடர்ந்தால் தான் அவர்களுக்கு லாபம். இல்லாவிட்டால், அவர்களுக்கு நஷ்டம்தான்" எனச் சூசகமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details