தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விளைவுகள் கடுமையாக இருக்கும் - காவல்துறையை எச்சரிக்கும் திமுக! - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: ஆட்சியில் உள்ள ஆணவத்தில் காவல்துறையை பயன்படுத்தி அதிகார வறம்பை மீறினால் முதலமைச்சரும், அதிகாரிகளும் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக உயர்நிலை கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

meet
meet

By

Published : Nov 23, 2020, 12:52 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆ.ராசா, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 30 செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீதான, காவல்துறையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, “ கரோனா ஆய்வு என்ற போர்வையில் அரசு செலவில் மாவட்டந்தோறும் அரசு விழாவை அரசியல் கூட்டமாக நடத்தி வரும் முதலமைச்சர், கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கொஞ்சமும் பின்பற்றப்படாமல் பெருந்திரளான கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதுடன் தரக்குறைவாகவும் பேசி வருகிறார். அவரைப் போலவே, அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களில் இதனை பின்பற்றுகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தீர்மானம்!

இவர்கள் யாரையும் காவல்துறை கைது செய்வதும் இல்லை, இரவு வரை சிறைப்படுத்துவதும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது வரவேற்பு என்ற பெயரில், சாலை நெடுகிலும் கூடி நின்ற அதிமுகவினரை காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, சென்னை காவல் ஆணையரே சாலையில் இறங்கிப் பாதுகாப்பு அளித்த, எல்லை மீறிய செயல்பாடுகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

மக்களாட்சியில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பரப்புரை செய்யும் உரிமை உண்டு. ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்ற ஆணவத்தில் காவல்துறையை பயன்படுத்தி அதிகார வறம்பை மீற முயற்சித்தால், அதற்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், அவர்களை தூண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் ” என திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சூரப்பா மீதான விசாரணை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details